தந்தையரே! முதுமையினால் தளர்ந்து வாடும் தள்ளாத காலத்தே துணையாய் நின்ற மைந்தர் தமை, குலவிளக்கை, ஒற்றைக் கொன்றாய் - வந்துதித்த வாரீசை வாரித் தந்தீர்! ' செந்திருப்போல் மனைவிளக்கி நின்ற என்றன் தேசத்தின் பெண்குலமே! கணவர் தம்மைத் தந்துங்கள் தாயகத்தின் மானம் காத்தீர்!' " தலைவணங்கி உமக்கெல்லாம் நன்றி சொன்னேன்.. ' 15 மாடிழந்தோம்; மனையிழந்தோம்; நந்தம் செல்வம் மைந்தர்களை, கணவர்தமை இழந்தோம்; சொந்த நாடிழந்தோம் ; நகரிழந்தோம்; கோட்டை கட்டி, நாமிருந்த செயலிழந்தோம்! எனினும் நெஞ்சில் சூடிழந்தும், சுரணை தனை இழந்தும், பிச்சைச் சோற்றுக்காய் மானத்தை இழந்தும் வாழும் ' 3படிகளைப் போல்வாழ மறுத்தோம்! யுத்தப் பேரிடம் வீழ்ந்திட்டோம்! தாழ்ந்தோ மில்லை! 15 நல்லவர்போல் உறவாடி நாசம் செய்யும் நரிக்குணத்து வெள்ளையரும், உடலில் தோன்றிக் கொல்லுகின்ற நோயைப்போல் நம்மைக் காட்டிக் கொடுக்கின்ற 1.3ரவிகளும், வாழ்வை நச்சுப் புல்லுருவி போலுறிஞ்சித் தீர்க்கும் மூடப் பொய்மைகளும் செய்த சதிப் போக்கால், இன்று ' தொல்லைநெடுங் காலமதாய்ப் பேணிக் காத்த சுதந்திரத்தை அயலார்முன் தோற்றோம், தோற்றோம்! 17
பக்கம்:காவியப்பரிசு.pdf/39
Appearance