உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியப்பரிசு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறவி ரகசியத்தையும் மனித வாழ்க்கைங்கை &ம் பற்றிய தத்துவ விசாரம், சிந்தனையாளர்களை யும் இலக்கிய கர்த்தாக்களையும் பன்னெடுங் கால 8.Bாக அலைத்து வருவதாகும். மதவாதத் தத்துவா சிரியர்கள் பலரும் ‘பிறவிப் பெருங்கடல் நீந்தும் மனிதப் பிறவியின் ரகசியத்தை, தொட்ட இடத் திலேயே வந்து முடியும் சக்கரவட்டத் தத்துவ மாக, மனித வாழ்க்கையை மாற்றமற்ற, வளர்ச்சியற்ற ஒன்றாகக் - கண்டார்கள். வாழ்க்கை ' என்பது தொட்ட இடத்திலேயே வந்து முடியும் சக்கர வட்டமல்ல என்பதைக் கருத்துலகில் மாத்திரம் நின்று கண்ட சிவ வாக்கியர் போன்ற சில சித்தர்கள் இந்தச் சக்கது" வட்டத் தத்துவத்தை மறுத்தார்கள், இவற்றினூடே பரிணாம வாதக் கருத்துக்களும் ஆங்காங்கு தலை காட்டின. உரிணாம வாதத்தை விஞ்ஞான பூர்வமாக அறிந்து தெளிந்து . அதனடிப்படையில் பொருள்முதல்வாதமும் விஞ் ஞான பூர்வமாக வளர்ந்தோங்கியுள்ள காலம் இது. மதவாதிகளின் கருத்தில் தொடங்கி, சிவ வாக்கியர் முதலிய சித்தர் வழியிலும் சென்று, பரிணாம வாதத்தின் பாதை வழியாக, இயக்க வியல் தத்துவத்தை ஆதாரமாகக் கொண்டு மனித வாழ்க்கையையும் வளர்ச்சியை யும் கான்பது பின்வரும் தத்துவார்த்தக் 'கவிதை. பிறவியும் மனித வாழ்க்கையும் தொட்ட இடத்தி லேயே வந்து முடியும் சக்கர வட்டமல்ல, மாறாகத் தொட்ட இடத்துக்குத் திரும்பவும் வராமலே சுழலேணியைப்போல் மேன்மேலும் வளர்ந் தோங்கிச் செல்வதாகும் என்பதையே இக் கவிதை உணர்த்துகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/41&oldid=989547" இலிருந்து மீள்விக்கப்பட்டது