பக்கம்:காவியப்பரிசு.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையெடுத்து மெயணைத்துக் கனகமுலை அமுதூட்டி : நெய்யளைந்த சிறுசோற்றை நிலாக்காட்டி வாயூட்டி, Bான்னை வளர்த்தாளின் இடை நீங்கி, மடி நீங்கி, தன்னை மெலவதித்து, தாய்ப்பாலின் சுவைமறந்து, கான்னையே யானறியும் இளைஞனெ மாறியபின் என்னையே யானோக்கி எண்ணுகின்றேன். எண்ணுங்கால் , வந்தவொரு வழிமறந்து, மாரோடு சேர்த்த முத்தம் தந்தவளின் சுனைமார்புத் . தடத்தை மறந்துவிட்டு, சிந்தை தனியாகி, சித்தமெல்லாம் நானாகி, விந்தை யுலகினிலே வேற்றூரான் போலாகிப் பந்தமுற்றுச் சொந்தமுறப் பற்றுக்கோல் காணேனாய் வெந்தே மனங்குமையும் வேளையிலே, காதலெனும் மந்திரத்தில் கட்டுண்டு, மங்கை ஒருத்தியின்மேல் சிந்தைகொண்டு அன்னவளைச் சேரத் துடிக்கின்றேன்!