பக்கம்:காவியப்பரிசு.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சூன்ஜரை" “நீ ஏன் கவிதை எழுதுகிறாய்?' என்று ஒரு கவிஞ னிடம் கேட்டால், “கு யில் ஏன் பாடுகிறது? என்ற எதிர்க் கேள்வியையே சமத்காரமாகப் பதிலாகத் தர அவள் எப். போதும் தயாராக இருப்பான், நான் அப்படியொன்றும் எதிர்க்கேள்வி எழுப்பி, என்னைக் கருவிலே திருவுடையவன் என்று கூறிக் கொள்ளத் துணியவும்' இல்லை; விரும்பவும் இல்லை . - * * துடிக்கு தன் உதடும் நாவும்; சொல்லு சொல்லெனவே நாவில் இடிக்குது குறளியம்மே | இனிக்கு றி சொல்லக்தேனே! என்று திருக்குற்றாலக் குறவஞ்சியில் வஞ்சிக் குறத்தி கூறும் கூற்று., 'கவிதைப் பிறப்புக்கான ஒரு டெர்து - இலக்கணம் , என்றே கூறலாம். எனினும் நான் ஏன் கவிதை எழுதுகிறேன் என்றால், இவ்வாறு இடித்தும் துடித்தும் எழுகின்ற உணர்ச் சியை அல்லது உண் :மயை, வசனத்தில் சொல்வதைக் காட் டிலும் கவிதையிலேயே அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் கூற முடியும் என்பது ஒருபுறமிருக்க, அந்த உணர்ச்சியை அல்லது உண்மையைக், கவிதை வடிவத்தில் சொல்வது தான் எனக்குச் சுளுவாகவும் இருக் கிறது சொல்லப்போனால், அதனைக் கவிதை வடிவத்தில் தான் அழுத்தமாக உணர்த்திக் காட்ட முடியும் என்ற நிலையே, அதனைக் கவிதையாக்குவதையும் சுலபமாக்கி விடுகிறது எனலாம், - இதனால் கவிதை எழுதுவதே எனக்கு மிகவும் சுளுவாகவும் சுலபமாகவும் இருக்கிறது என்று நான் கூற வரவில்லை. கவிதை வடிவில் சொல்வதன் மூலமே ஓர் உணர்ச்சியை அல்லது உண்மையைப் பிறருக்கும் - உணர்த்தி, அவர்கள் உள்ளத்தில் உணர்ச்சிபூர்வமான எதிரொலியை எழுப்ப முடியும் என்ற நிலை ஏற்படும்போது, சொல்ல வந்த உணர்ச் சியை அல்லது உண்மையை எவ்வாறு கவிதைப் பொருளாக மாற்றுவது, அவ்வாறு மாற்றிய கவிதைப் பொருளைக் கவிதை யாக்க எந்த வடிவத்தைக் கையாள்வது என்று தீர்மானிப்பது ஒரு பிரசவ வேதனை தான். ஆயினும் ஓர் உணர்ச்சியைக் கவிதைப் பொருளாக்குவதற்கான முறையும், அதற்கேற்ற