பக்கம்:காவியப்பரிசு.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் ஒருவன் ஆனாலும் நாமறியாக் கால முதல் மாநிலத்தில் உற்பவித்த மானிடமாம் சாகரத்தின் ஒருதுளியாம் என்றிடுமோர் உணர்வுதனைப் பெற்றுவிட்டால், வருநாளில் இத்துளியே வழிவழியாய் வளர்ந்தோங்கிப் பெருகும், பெருகியொரு பெருங்கடலாய் மாறுமென்று கருதுகின்ற பக்குவத்தைக் கண்டறிந்து கொண்டுவிட்டால், என்னால் உலகதனை, உலகியலில் என்னிடத்தை உன்னி உணர்ந்தறியும் உள்ளொளியை ஏற்றிவிட்டால், முன்னைப் பழமையிலும் முளைத்துவந்த வாரீசாய், பின்னைப் புதுமைக்கும் பீடிகையாய் நான் வாழ்ந்தால், என்றைக்கே வாழ்ந்தாலும் என்றென்றும் வாழேனோ? ஈன்றெண்ணிப் பார்க்கின்றேன் எண் ணுங்கால்... என்ன ணுங்கால்...