உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியப்பரிசு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இமிக்கு அப்பாலுள்ள கோளங்களின் ரகசியங்களையும், விண்வெளியின் விந்தைகளை யும் மனிதன் நேரிலேயே சென்று கண்டறிந்து வரும் சகாப்தம் இது. விஞ்ஞானி சாதனை இத் தகைய வெற்றிப்பாதையில் வீறு நடை போட்டு . முன்னேறி வரும் அதே சமயம், மனித உள்ளத் தில் தாழ்வு மனப்பான்மையையும் அவன் நபி கையையும் சிறுமையுணர்ச்சியையும் உருவாக் கும் வகையில், ஆனந்தமான பிரபஞ்ச ரகசியத்தை , அற்பாயுள் கொண்ட மானிட* அளந்தறிய முடியுமா எனப் பேசக்கூடிய தத்துன வாதிகளும், சமயவாதிகளும், விஞ்ஞானி' களும்கூட... உலகில் உள்ளனர். அத்தகையோசின் கூற்றுக்கு மறுப்புரையாகவும், அத்தகைய தத்துவவாதத்துக்குப் பதிலாகவும் அமைந்ததே அடுத்துவரும் கவிதை, இக் கவிதை முதன் முதலில் வானொலியின் 'கவிச் சொல் கேளீர் நிகழ்ச்சியில் 12-7-1960 அன்று திருச்சி வானொலி மூலம் தவிபரப்பாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/51&oldid=989537" இலிருந்து மீள்விக்கப்பட்டது