இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஏதோ எங்கிருந்தோ என்னை விளித்தழைத்துச் ஆதாய் ஒரு குரல்தான் சொல்லத் தொடங்கியது;
- 'ஏடா! சிறுக்கனிதா!
எத்தை விரும்புகின்றாய்?' கூடாத விருப்பன்றே கொண்டிட்டாய் வெட்டவெ ளிப் பாழாம் பரவெளியும் - பருத்துத் திரண்டுருண்டு தாளாய்ச் சிதறியதோர் தோற்றமெனக் காண்கின்ற , அண்டாண்ட பிண்டம் 'அகிலாண்டம் பலகோடி உண்டுண்டு! அதிலுன்றன் உலகம் சிறு துளிதான்! சிறுதுளியில், இனந்தெரியாச் சிறுதுளியாய்ச் செனித்துலகில், உருவெடுத்துச் சின்னாளே உயிர்வாழ்ந்து. உருவழிந்து மறைகின்ற மானிடன் நீ! . மாயப்ர பஞ்சத்தே - 8.றைகின்ற பொருளையெவாம் உன்வசமாய் ஆக்குதற்கு . விரைகின்ற நின்விருப்பில் விவேகம் சிறிதுண்டோ ?