பக்கம்:காவியப்பரிசு.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோயில்கொண்ட நெல்லையப்பன் கோபுரத்தின் 'ஆசார வாயிலினைக் கடந்துள்ளே

  • அடியெடுத்து வைத்திட்டால்,

கல்லும் கவிபாடும் என்றுரைக்கும் கட்டுரையின் , சொல்லுக் கிலக்கணமாய் ஆங்குள்ள தூண்களிலே ஏழிசையும் தனியெழுப்பும் - இன்னிசையும் கேட்பார்க்குத் தாழ்சடையோன் தன்வடிவைத் தாளத்தால் காட்டாதோ? கற்கோவில் மலிந்திருக்கும் - கன்னித் தமிழ்நாட்டில் சொற்கோவில் பலவெடுத்துத் தொண்டுசெய்த நெல்வேலிப் பாவலர்கள் கூட்டமொரு பட்டாளம் ஆகுமென்று தாவலித்து நானுரைத்தால் நானிலத்தார் மறுப்பாரோ? நாற்று நடும் பள்ளியமர்தம் நாவில் தவழ்ந்துவரும் ஊற்றுத் தமிழ்மொழியை இலக்கியத்தில் உருவேற்றித் தெள்ளுதமிழ்த் தேன்பாகாய்த் " தித்திக்க முக்கூடற் பள்ளதனைப் பாடியதும் - திருநெல்லைப் பதியன்றோ?