இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
செக்கிழுத்த சிதம்பரனும் வே ஜபல் தியாகிகளும் திக்கதிர முழங்கியதும் திருநெல்லை மண்ணிலன்றோ? குன்றுபல கோவில் கொண்ட குமரேசன் கடலருகே சென்றுகுடி யேறியதெம் திருச்செந்திற் பதியன்றோ? மாத்தமிழர் பெற்ற செல்வ - வளம்பலவே என்றாலும் , தூத்துக் குடி முத்தின் - சுடரொளிக்கு நிகராமோ? " ஆனியில் எம் குற்றாலத் தருளியிலே தலை கொடுப்பார் மேனியெலாம் பொன்னொளியாய் மின்னொளியாய் மாறாதோ? செந்தமிழர் தம்பேச்சிற் சிறந்ததெனும் தென்பாண்டிப் . பைந்தமிழும் நெல்வேலிப் - பதிவழங்கும் பேச்சன்றோ ? அண்ணாச்சி என்றே வாம் அழைக்கின்ற குரல் கேட்டால் புண்ணான நெஞ்சமும்தான், புளகித்துப் போகாதோ? - முற்றிக் கனிந்த நறும் - . முக்கனியும்," நெல்வேலி வற்றல் குழம்பெதிரே வரிசையிட்டு நின்றிடுமோ?