இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அந்நாளில்--- காசினியின் ஏனைமக்கள் காட்டு மிராண்டிகளாய், பேசுதற்கும் பழகாத பிராணிகளாய், நாகரிக வாசனையே நுகராத மந்தைப் பிறவிகனாய் வாழ்ந்து வர, கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி விட்டதொரு மூத்த குடிப்பிறந்து, தென்றலொடு தான் பிறந்த தீந்தமிழைப் பேசிவந்த அன்லறத் தமிழ்மகனோ அறநெறியில், பண்பாட்டில், குன்றாப் புகழ் சுமந்து கொடிகட்டி, வாழ்வியலில் உச்சாணிக் கொப்பே றி உயர்ந்திருந்தான். உலகுக்கே. அச்சாணி போல்மைந்து அகிலமெலாம் விதந்தோதி மெச்சும் படிக்கிங்கு வீற்றிருந்தான் என்றெல்லாம் உச்சந் தலைகுளிர உரைக்கின்றார் பெரும்பாலோர்.