உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியப்பரிசு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுவூரில் முளைத்தெழுந்த '- நச்சுமரம் போன்ற பல கொடும்பாவிப் பிறவிகளைக் கோபமுடன் தாக்குகின்றீர்! சொற்புத்தி கேட்பதற்கும் சுரணைகெட்டுச் சீரழிந்த அற்பப் பிறவிகளை. ஆலைக் கரும்பெனவே பிழிந்தெடுத்தா லன்றி பயன் பெறுவதற்கே இல்லையென்றும் மொழிகின்றீர்! வறியவர்க்கோர் வாய்க்குணவு வழங்காத லோபியரை இருசெவிட்டில் அறைந்தால்தான் ஏதேனும் தருவரென்றும் , உரைக்கின்றீர்! . யாசித்தே உயிர்பிழைக்க வேண்டுமெனில், நமைப்படைத்த, ஈசனுமே திருவோட்டை, . ஏந்தித் திரிகவென்றே கூசாமல் வசைபாடிக் குவிக்கின்றீர்!- இவ்வாறாய்- இனிய உளவாக . . . இன்னாத கூறுவது கனியிருப்பக் காய் நுகரும் காரியமே ஆகுமெனச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/71&oldid=989553" இலிருந்து மீள்விக்கப்பட்டது