பக்கம்:காவியப்பரிசு.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதலினால்- வையகத்தே வாழ்வாங்கு ஆாழும் நெறியிதென, ஐயா! நீர் கூறிவந்த அவசியத்தை, அடிப்படையை, மெய்யான காரணத்தை மறைக்காமல் விளம்பிடுவீர்! ஒருவேளை--- நீர்வாழ்ந்த காலத்தின் இலையதனைப் பண்பாட்டின் சீர்மலிந்த சிகரமெனச் செப்புவதும் பொய்தானோ? அறநெறியை' இத்தனைக்கு அழுத்தமுடன். வலியுறுத்தி வரையறுக்கும் நிர்ப்பந்தம் வாழ்வில் இருந்ததுவோ? முப்பாலில் நீர்விளக்கி மொழிகின்ற நன்னெறிக்கே அப்பாலாய்த் தான் வாழ்க்கை அன்றைக் கிருந்ததுவோ? இத்தகையோர் என்றே நீர் இனங்காட்டி இடித்துரைக்கும் அத்தகைய கயவரெலாம் அந்நாளில் இருந்தாரோ? பொல்லாங்கே நித்தம் நித்தம் . கரிந்தாலும், உலகினர்முன் : நல்லார்போல் ' - படங்காட்டி.. நடிப்பதனால், பொன்னாடை,