இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காந்தி மகான்.... காந்திமகான் காட்டுகின்ற மார்க்கம் தள்ணேல் கடைப்பிடிக்கும் எம்மவர்தம் இதயம் தள்னில் போந்திருக்கும் குறிக்கோளும் பொதுவாம்; ஒன்றாம்,, பொருள் சேர்க்கும் எண்ணத்தால், வறுமைப் பட்டுக் இரந்துகின்ற ஏழையரைச் சுரண்டி வாழோம்; கணக்கற்ற பெரு நிதியக் கடலில் இன்பம் மாந்துகின்ற செல்வர் தரை மப் பணிந்து வாழ்த்தி மண்டியிட்டுத் தலைகுனிந்து வாழோம், வாழோம்! ஒங்கியதோர் கையோடும், உடலைத் தாக்கும் உறுதியோ டுயர்த்தியதோர் தடியும் கெ (Yண்டே ஆங்கவர்கள் நமைத் தாக்க முனைந்த போதும் அன்னவரைப் புன்னகையோ டணுகி, 'ஐயா! தூங்கியெழும் குழந்தையெனில் உங்கள் சீற்றத் "தோற்றத்தைக் கண்டஞ்சக் கூடும்; ஆனால் ஓங்காலம் வந்தாலும் அச்சம் காணாச் சாதகர் தாம் அஞ்சுவரோ?' என்றே கேட்போம்!