பக்கம்:காவியப்பரிசு.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எk:களது பேச்செல்லாம் நேர்மை யோடும் எளிமையொடும் இருப்பதலால், வார்த்தை தன்னைத் தங்களது விருப்பம்போல் திரிக்கும் ராஜ தந்திரத்தைச் சேர்ந்ததிலை? அதற்கு மாறாய் எங்களது பேச்செல்லாம் சட்டம் தன்னை எடுத்தெறிந்து பேசுவதால் எம்மை யெல்லாம் வெங்கொடுமைச் சிறைக்கோட்ட வாயில் நோக்கி விரைந்திழுத்துக் கொண்டேகிச் செல்லும், செல்லும்{ $ சிறைக்கோட்டம் செல்லுகின்ற பாதை யெல்லாம் திவாகியர்தம் திருக்கூட்டம் சேரச் சேர, இறைப்பட்ட அவமானக் களங்கம் எல்லாம் கரைந்தழிந்து மறைந்தொழியும்; பன்னூற் ருண்டாய்த் தறையீட்டுப் பூட்டி வைத்த தளைகள் யாவும் , தவிடுபொடி யாகிவிடும்! தருமப் போரில் சிறைப்பட்ட வீரர்களின் நுதலில், காந்தி திலகமிட்ட நல்லாசி இலகித் தோன்றும்!