பக்கம்:காவியப்பரிசு.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் பூத்த தாமரையே! தமிழ் நாடு கலை இலக்கியப் பெரு மன்றத் தின் முதற் பெரும் தலைவரும், 'தாமரை' பத்திரிகையின் ஆசிரியரும், பொதுவுடைமை இயக்கத் தலைவரும், சித்த' பேச்சாளரும், இலக்கிய அறிஞருமான ப. ஜீவானந்தம் (ஜீவா) 18. 1, 1963 அன்று அமரரான அகத் தில் பாடிய இரங்கற்பா. நெடுவானில் நடுப்பகலில் கதிரோன் தன்னை . நெருப்பவித்தே . ஒளிபறித்து மறைத்தாற் போலே தொடுவானம் கிழித்துயரும் இமய. வெற்பைத் : துடைத்தெடுத்து வெம்பரப்பாய்த் தூர்த்தாற் போலே அடிவானம் தனைவளைக்கும் கடலை முற்றும் அரைநொடியில் குடித்தேப்பம் விட்டாற் போலே படுபாவி எமனே எம் ஜீவர் தன்னைப் பறித்தெடுத்தேன் சூனியத்தைப் பரப்பிச் சென் றாய்? சோவியத்துத்திரு நாடு சென்ற நீயும் சுகம் பெற்றேன் தெம்புற்றேன் என்றாய்; அந்தக் காணி யத்துப் புதுவாழ்வைக் கண்ணாற் கண்ட களிப்பதனால் நெடுங்காலம் வாழ்வேன் என்றாய், ஆவியெலாம் - குளிரவதைக் கேட்டோம்; அந்த - அகமகிழ்வை ALSண்ணாக்கி, ஐயா! ஜீவா1 . ஓவியத்துப் பதுமையெனக் கண்ணை மூடி உன்வாக்கைப் பொய்யாக்கி ஏனோ' சென்றாய்? . 2