உரம்மிகுந்த கரவலியால் உழைப்போர் தங்கள் உரிமைகளைப் பறித்தவர் தம் உழைப்பைத் தின்று தரமுயர்ந்த செல்வரென்றும், தருமர் என்றும் தருக்கியவர் செருக்கடக்கி , தரணி தன்னில் கரமுடையோர் யாவருமே உழைத்தே யுண்ணும் - கட்டளையைச் செயல் நடத்தி, கடைப்பட்டோரின் சீரமுயரச் செய்யுமொரு தியாக் கேள்வித் . தீயிடையே இருக்கான திறலோய் வாழி! வையகத்துத் தொழிலாளர் நாளும் தாங்கள் வறுமையொடு போராடும் மருமம் தன்னை ஐயமறத் தெளிந்துணர்ந்து கைகள் கோத்தால், அணிவகுத்தால், படைதிரண்டால், அறப்போர் மூண்டால், கையறுத்த தளைநொறுங்கக் காண்பார்! அன்றே
- காசினியும் தமதாகக் காண்பார்! என்றே
மெய்யறிஞன் மார்க்சரைத்தான்! அவன்றன் வாக்கை ' மெய்யுரையாய் ஆக்கிவைத்த மேதரய் வாழி! பகுத்துண்டு பல்லுயிரும் ஒம்பி வாழும்" . பண்பாட்டைப் பாவலர்கள் பல்லாற் றலும் வகுத்துரைத்துச் சென்றதெலாம் நனவே யாகி , வாழ்க்கையிலே வடிவெடுக்க , பிறர் தம் வாழ்வைச் செகுத்துண்டு வாழ்ந்தார்தம் சூழ்ச்சி யாவும் - சென்றெழிய, பொதுவுடைமை நியதி தன்னைப் புகுத்திருந்தது. உலகுக்கே விளக்கம் ஏந்திப் போந்தவனே! லெனினென்னும் புகழோய் வாழி!