பக்கம்:காவியப்பரிசு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துன்மதியர் போர்வெறியர் லாபக் கொள்ளைச் சூதாட்டக் காரர்செயும் துன்பை யெல்லாம் . கன்மவினை சென்மவினை என்றே எண்ணிக் . கண்ணிழந்து கருத்தழிந்து கிடந்த மாந்தர் தன்மதிப்பை, தம்குலத்தை, தம்ப லத்தைத் தானுணரச் செய்தவர்க்கே தலைமை தாங்கி நன்மதிப்பின் புத்துலகைச் சமைத்துக் காட்டி நானிலத்தும் புகழ்படைத்த புரட்சி வாழி! கொலை வாழ்வை:, நச்சு கின்ற யுத்தப் பித்தம் " கொண்டவர்கலி உலகமக்கள் தம்மைப் பிச்சைப்' புலைவாழ்வுக் குட்படுத்தும் புன்மை தன்னைப் 3.Jாக்குதற்கோர் ஆக்கநெறி புகன்று, மக்கள் ' கலை வாழ்வும் களிவாழ்வும் காதல் வாழ்வும் கன வாழ்வும் மிகப்பெற்றுச் சிறந்தெந் நாளும் "திலைவாழ்வு வாழுமுறை வகுத்துக் காட்டி நிலைபெற்றுக் கலிமுடித்த புரட்சி வாழி! "உழைக்கின்ற மக்களுக்கே உலகம்' என்றே உலகவியல் கண்டுசொலி, உலகைத் தன்பால் அழைக்கின்ற மார்க்ஸிய மார்க்கம் சென்றே - ஆறிலொரு பூவுலகில் புதிய வாழ்வைத் ' தழைக்கின்ற படிச்செய்து, ருஷிய மக்கள் தளையறுத்து, வெங்கொடுமை நரக வாதை இழைக்கின்ற கொடுங்கோலர் சூழ்ச்சி வென்று ஏற்றமுற்ற அக்டோபர் புரட்சி வாழி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/87&oldid=989571" இலிருந்து மீள்விக்கப்பட்டது