இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மாமேதை லெனின்வசூத்த வழி நின்று, புத்துலகைப் பூமியினில் படைத்தளித்த சரித்திரத்தின் பொன்னேடே? அவனியெலாம் போற்றுகின்ற அக்டோபர் புரட்சியினால் புவனத்தின் இருள் கடிந்து. பொங்கிவந்த பொற்சுடரே! உழைப்பவர்க்கே உலகமெனும் உண்மையினை நடைமுறையில் தழைத்தோங்கச் செய்திட்ட தலைமகனே! வாழிய நீ! அடிமைச் சிறையெனவே அகன்றிருந்த பெருநாட்டில் மிடிமையிலும் , வறுமையிலும் - - மெலிந்து நலிந்தமக்கட் குலமதற்கு வாழ்வளித்து, கொடுமைகளைக் களைந்துலகில் தலை நிமிர்ந்து நிற்கவைத்த சாதனையே! வாழிய நீ! நூறுமொழி பேசிவந்த நூற்றினத்து மக்கள்தமைக் கூறுசெய்து ஜாரரசள் கோலோச்சி வந்ததெலாம் வேரோடு அடிசாய்ந்து வீழ்ந்துபட, மக்களெலாம் ஓரின L.மாய் வாழவைத்த ஒன்றியமே! வாழிய நீ