இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அறியாமை இருட்சேற்றில் அமிழ்ந்து கிடந்தவரும் பெருஞான ஒளிபெற்றுப் பிறங்கவைத்த பேரொலிக்கர் மேதினியின் மக்களெலாம் வேற்றுமைகள் தமைக்களைந்து சோதரராய் வாழ்முறையைச் சொல்லிநின்ற சற்குருவே! சுதந்திரத்தின், சமத்துவத்தின், சோதரத்வ தத்துவத்தின் உதாரணமே! சோவியத்து ஒள்றியமே! நின்புகழைச் சந்ததமும் பல்பொருளைச் சீமைத்துக் குவிக்குமுன் றன் எந்திரங்கள் அயராது - எழுப்புகின்ற பேரொலியில், கூட்டுறவுப் பண்ணைகளில் கொழித்துச் செழித்து தன் ஆட்டுகின்ற பொற்கதிரின் அழகுத் திருக்கொலுவில், பாலை வனப் பரப்பையெலாம் பழத்தோட்டம் மலர்த்தோட்டத் சோலைவனம் என்றாக்கும் சோதனையின் வெற்றியினில், காவியத்தைத் தம்கருத்தால் கரத்தால் படைத்துவரும் சோவியத்து மக்களர்தம் உழைப்பின் சுறுசுறுப்பில். லிண்ணரங்கில் சென்ற கலம் வெள்ளிக் கிரகமதன்' உண்ணதனை ஆய்ந்துசொலும் மகத்தான சாதனையில்,