பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காவியப் பாவை



சூட்டு புகழுரை எத்தனை தான்-அட!
சொல்லுக் கடங்காமல் மிக்கதடா!
ஏட்டில் எழுதிய போற்றிகளும்-ஒரு
எண்ணிக்கை காட்டத் தொலையுமதோ

ஆயிரம் ஆயிரம் கொட்டுகின்றார்-அணி
ஆடை பலசெய்து பூட்டுகின்றார்
கோயிலைப் போற்பல மாளிகைகள்-கட்டிக்
கொள்ளையாய் மானியம் கூட்டுகின்றார்

விந்தையடா இது விந்தையடா- என
வேறொரு திக்கில் விரைந்து சென்றேன்
சிந்தனை அற்றவர் அங்கிருந்து-புரி
செய்கையைக் கண்டுளம் நொந்ததடா

கண்ணொளி மங்கிய காட்சியினான்-பிறை
கண்டது போலொரு கூனுடையான்
எண்ணிய எண்ணம் விளம்புதற்கே-ஒரு
ஏதுவிலான் திக்கு வாயுடையான்

24