பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை நின்று நடந்திடக் கால்களிலான்-அவன் நிற்பது வோஒரு கோலின் துணை ஒன்றிய கோலினைப் பற்றுதற்கோ-கையில் உற்ற விரல்களும் முற்றுமிலான் இத்துணைப் பண்புகள் கொண்டவனே-நலம் ஏற்றிட ஊசிகள் போடுகின்ருர் -சித்த மருத்துவம் செய்யினுமே-அவன் சீரிய வாழ்வினைக் காண்பதுண்டோ ஆணிப்பொன் னுடையும் போர்த்துகின்ருர்-நல்ல ஆட்சிப் பொறுப்பையும் நல்குகின்ருர் காணிக்கை எத்தனை கொட்டுகின்ருர்-இந்தக் காட்சியைக் காணக்கண் கூசிகின்றேன் உள்ளம் உருக்கிடும் ஓர்குரல்தான்-செவி உற்றதும் சட்டென நான்திரும்பக் கள்ளமில் லாஒரு ஏழைமகன்-பசி காட்டும் முகத்துடன் கின்றிருந்தான் ஆ T. பIT, 2