பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை மந்திர மில்லாமல்-ஓதும் மறையவர் இல்லாமல் சந்தன. மில்லாமல்-தாலிச் சரடுமே இல்லாமல் அந்த இடம் மணந்தோம்-சான்று அகமன்றி வேறில்லே தொந்திர வில்லாமல்-நாங்கள் துணைவர்களாகிவிட்டோம் பஞ்சணை தூங்கிடுவேன்-தமிழால் பாடி எழுப்பிடுவாள் கொஞ்சு மொழிபேசி-வெந்நீர் குளித்திட வாருமென்பாள் நெஞ்சினில் அன்பொழுக-அப்ப நெய்யொழுகத் தருவாள் வஞ்சி விடை தருவாய்-என்ருல் வாள்விழி காட்டிடுவாள் 74