பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை வெண்ணிலவே கண்வளராய் ! D கடைந்தெடுத்த பொற்சிலேயே கண்காணும் தேவே நடந்துவரும் வெண்ணிலவே நாண்மலரே கண்வளராய் வீட்டுப் பெரியோர் விளைத்துவரும் என்துயரை ஒட்டப் பிறந்தவனே உத்தமனே கண்வளராய் புலர்காலை வீசுகின்ற பூங்காற்றே நின்னுடைய மலர்விழிகள் நீர்சிந்த மனம்பொறுக்க வல்லேனே பசியால் அழுதாயோ பாலகனே கண்கள் கசியாதே அன்போடு கலந்துபால் நான்தருவேன் நிலத்தில் எழுஞ்சுடரே நித்திலமே என் கலியை விலக்கப் பிறந்தவனே வீட்டிற் கணிகலமே உழைப்பார் நிலையுணர்ந்தோ ஒண்டவந்தோர் இங்கே களைப்பாறித் தீங்கிழைக்கும் கயமைக் குணங்கண்டோ 82