பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை தமிழ்வளர ஏதும் தடங்கல் வருமென்ருே இமைமூட மனமின்றி இருக்கின்ருய் என்கண்ணே மடங்கல் உரங்காட்டும் மாமல்லர் காத்திடுவார் தடங்கல் வாராது தம்பி கண்வளராய் பழிப்புரைகள் வந்தணையப் பார்த்திருக்க மாட்டார்கள் விழித்துவிட்டார் உன்ட்ைடார் வீணுக அஞ்சாதே பன்மொழிகள் கற்றுணர்ந்த பண்புடையார் வாழ்வத'ை புன்மையிங்கு நேராது பூஞ்சிட்டே கண்வளராய் நம்நாட்டைச் சீரழிக்கும் நாலுவகைச் சாதிகளே வெங்காட்டச் செய்த விறலோனே கண்வளராய் ஆளும் மொழிஒன்றே அதுவும் தமிழென்றே நாளும் சொலும்என்றன் நாயகன்றன் மார்பகமும் பாட்டன் தடந்தோளும் பாய்ந்து விளையாடி வேட்டைக் களமாக்கும் வீரனே கண்வளராய் 8:3