பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவையின் பாடல்



தாய்மொழியின்பால் நல்லன்பு கொள்கவென நாப்பறை சாற்றி, மூவேந்தர் பெருமையினை முரசறைந்து, வணக்கமெனச் சொன்னால் வாய் நோகுமோ என வலிய குரலெழுப்பி, ஆண்டவன் வெறுத்தாரோ நமது அருமைத் தமிழை என்று அதட்டிக் கேட்டு, நல்லிசை பாடிச் சில ஆண்டுகட்கு முன்பு தமிழகத்தில் உலாப் போந்தனள் இக்காவியப் பாவை.

அக்காலை, வணக்கம் என்ற சொற் கேட்டு வயிறெரிந்தவரும் உண்டு; மன்னர் பெருமையை இன்னும் பாடுவதா என மனம் புழுங்கியவரும் உண்டு; தமிழென்ற ஒலி கேட்டுப் பிறமொழி வெறுப்பெனப் பேசியவரும் உண்டு. ஆயினும் வாயார மனமார வாழ்த்திய தமிழ் நெஞ்சங்களும் உண்டு.

7