பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை தெய்வங்கள் பற்பல வேண்டுகிறீர் - பகைத் தியை வளர்த்திங்கு மாளுகின்றீர் உய்யும் வழிசொன்ன என்மொழியைப் - புதைத் தோங்கிய மண்டபங் கட்டிவிட்டீர்! கோவிலில் மாணவர் கல்விபெறப் - பள்ளிக் கூடங்கள் ஆக்கிட முன்வருவோர் ஆவலைக் கொன்று விழுங்குதற்கே - சட்டம் ஆக்கிட முன்னிருந் தார்ப்பரிப்பீர் ! திண்டாமை என்ருெரு சாக்கடையை - இன்னும் தெய்வத்தின் முன்னரும் பாய்ச்சுகின்றீர் வேண்டாமென் றெத்துணைப் பாடல் சொன்னேன் - எலாம் வீணுக்கி என்பெயர் பாடுகின்றீர் ! ஐயையோ என்னுயிர்ப் பாடல்பல - இன்னும் ஆரு மறியாமல் பூட்டிவைத்தீர் வையைக் கரைதனில் ஓரறையில் - அவை வாழ்விழந் திங்ங்ணம் மாய்வதுவோ ?