பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை ஏழையைக் கண்டிலேன் ! D கல்லைக் கணிய வைத்தான் - அங்கே கற்பனை தேக்கி வைத்தான் சொல்லத் துடிதுடித்தே - கவிதை துள்ளிக் குதித்ததடா ! உண்ணவும் நேர மிலான் - சற்றே ஓய்வும் ஒழிவு மிலான் எண்ண மெலாங் குவிய - கெஞ்சில் ஏக்கம் நிறைந்ததடா ! ஐந்து விர லிடையே - சிற்றுளி ஆடித் திரிந்த தடா! அந்த நடந் தனிலே - அவன்விழி ஆழ்ந்து பதிந்ததடா !