பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 னும் ஊருக்கு உரிமைபூண்ட தலைவன் என்று பொருள் படும். சேக்கிழார் என்பது சேவூர்க்கிழான் என்பதன் மரூஉப் பெயர் என்பர் சிலர். அது சே என்ற ஊருக் குத் தலைவன் எனப் பொருள்படுவதாகும். இச் சேக் கிழான் குடியில் பிறந்து பெருமையுற்றவரே சேக்கிழார் என்னும் செந்தமிழ்ப் புலவர். இனி, சே என்னும் சொல் காளேயைக் குறிக்கு மாதலின், காளையைக் கொண்டு உழவுத்தொழில் புரி யும் வேளாளர்க்குப் பொதுப் பெயராய்ச் சேக்கிழான் என்பது விளங்கிற்று என்பர் சிலர். அன்றிச் சேக் கிழான் என்பது காளே வாகனத்தை உடைய கடவு ளாகிய சிவபெருமானேக் குறிக்கும்; அப்பெயரைத் தனக்குப் பெயராகக்கொண்ட வேளாளன் ஒருவனது மரபில் உதித்தவரே பெரியபுராண ஆசிரியர் என்று பேசுவார் வேறு சிலர். - குன்றத்துார் அமைப்பு சேக்கிழார் தோன்றும் சிறப்பெய்திய குன்றத்துரர் தன்பால் குன்றம் ஒன்றைக் கொண்டதாகவே இன்றும் விளங்குகின்றது. அவ்வூரில் இன்றும் சேக்கிழார் மர பினராகிய வேளாளர் சிறந்து விளங்குகின்றனர். அவ் ஆர் திருநாகேசுவரம், நத்தம் என்னும் இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது. திருநாகேசுவரம் என்பது சேக்கிழார் பெருமான் கட்டிய திருநாகேசுவரம் கோவிலைத் தன் னகத்தே கொண்ட தனிப்பகுதியாகும். அக் கோவிலேச் சுற்றியுள்ள இடங்களில் செங்குந்த மரபினர் வாழ் கின்றனர். மற்ருெரு பகுதியாகிய நத்தம், சேக்கிழாரும் அவர் மரபினராகிய வேளாளப் பெருமக்களும் வாழ்ந்த இடமாகும். அக் காளில் சேக்கிழார் வாழ்ந்த இல்லம்