பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 இன்று அவரது திருக்கோவிலாக இருக்கின்றது. சேக் கிழார் கோவிலே அடுத்துப் பாலருவாயர் குளம்' என்ப தொரு நீர்நிலை அமைந்துள்ளது. அதனே இப்பொழுது பல்லவராயர் கேணி என்று சொல்லுகின்றனர். பாலருவாயர் என்பவர் சேக்கிழாரின் தம்பியாராவர். சேக்கிழார் புராணம் நம் தமிழகத்தில் வாழ்ந்த பழந்தமிழ்ப் புலவர்கள் தங்கள் வரலாற்றை வரையாது மறைந்தனர். மற்றை யோரும் அதனேச் செய்ய மறந்தனர். ஆனால், தமிழ்நாடு செய்த தவப்பயலுைம், சிறப்பாகச் சைவ உலகம் செய்த தவப்பேற்ருலும் சேக்கிழாருக்குச் சிறந்த வரலாற்றுநூல் கிடைத்துள்ளது. சைவசமய சந்தான குரவருள் ஒருவராய கொற்றவன்குடி உமாபதிசிவனுர் சேக்கிழார்புராணம் செய்துவைத்துள்ளார். உமாபதி சிவனர் பதின்ைகாம் நூற்ருண்டில் வாழ்ந்த பைந் தமிழ்ச் சைவசித்தாந்தப் பேரறிஞர். இவர் சைவ சித்தாந்த சாத்திரம் பதின்ைகனுள் சிவப்பிரகாசம் முதலிய எட்டு நூல்கள் இயற்றியவர். இவர் சங்கற்ப கிராகரணம் என்னும் தமது நூலே இயற்றிய காலம் சாலிவாகன சகாப்தம் கஉங்டடு என்று குறித்துள்ளார். அது கி.பி. 1818 ஆகும். இவர் சேக்கிழார் புராணத்தை எப்பொழுது இயற்றினர் என்பது தெரியவில்லை. சேக்கிழார் பெரியபுராணம் இயற்றிய காலம் இரண்டாம் குலோத்துங்க சோழ மன்னன் காலமாகிய பதினேராம் நூற் ருண்டின் இறுதி என்று சரித ஆசிரியர்கள் கணித்துள் ளனர். ஆகவே, சேக்கிழார் காலத்திற்கு ஏறத்தாழ இருநூறு ஆண்டுகட்குப் பிற்பட்டவர் உமாபதி சிவனர். அவர் இயற்றிய சேக்கிழார் புராணம் உண்மையான வரலாறு என்பதைத் திண்மை செய்யும் கல்வெட்டுச் சான்றுகள் பலவுள.