94. பெற்ருேரும் இயற்பெயரும் தொண்டை மண்டல வேளாளர் குலத்தவராகிய வெள்ளியங்கிரி முதலியார் சேக்கிழாரின் தந்தை என்றும் தாய் அழகாம்பிகை என்றும் காதுவழிச் செய்தியொன்று வழங்குகின்றது. சேக்கிழாரின் பெற்ருேரைப்பற்றி உமாபதிசிவனர் யாதும் உரைக்கவில்லை. இவரது இயற்பெயர் அருண்மொழித்தேவர் என்பர். திருமழபாடிச் சிவன் கோவிலிலுள்ள கல்வெட்டு ஒன்றில் : ஜெயங் கொண்ட சோழ மண்டலத்துக் குன்றத்துார் நாட்டுக் குன்றத்தூர்ச் சேக்கிழான் மாதேவடிகள் இராமதேவ ஞன உத்தமசோழப் பல்லவராயன்,' என்று சேக் கிழார் குறிக்கப்படுகின்ருர். ஆதலின் சேக்கிழாரது இயற்பெயர் இராமதேவன் என்று கல்வெட்டு ஆராய்ச்சி யாளர் சொல்லுவர். நரசிங்கமுனேயரையர், புருடோத் தம நம்பி போன்ற சிவனடியார்கள் வைணவப்பெயர் தாங்கியிருந்தமை போன்று, சேக்கிழாரும் இராம தேவன் என்ற இயற்பெயரைப் பெற்றிருக்கலாம். சேக்கிழார் புலமைத்திறம் சேக்கிழான் குடியில் பிறந்தவராகிய இராம தேவன் என்பார் இளமையிலேயே தமிழிலுள்ள சிறந்த இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். பல் வேறு சமயசாத்திரங்களைக் கற்றுணர்ந்தார். இவரது துண்ணறிவைச் சோழன் அறியும் வாய்ப்பொன்று கண்ணியது. அங்காளில் சோழநாட்டை ஆண்ட அநபாயன் என்னும் மன்னன், ஒருகால் தன் பேரவை யில் இருந்த அறிஞர்களே நோக்கி, ' நிலம், கடல், மலே இவற்றில் பெரியன யாவை ?” என்று வினவினன். ஆங்கிருந்தாருள் எவரும் அதற்கு விடையிறுத்தாரில்லே.
பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/102
Appearance