பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 அப் பேரவைக்கண் வேளாளர் குலத்தினராகிய அரசியல் அலுவலாளர்களும் அமர்ந்திருந்தனர். அவ ரெல்லாம் அரசன் விைைவப்பற்றிப் பலவாறு பேசிக் கொண்டிருந்தனர். அதனைச் செவியுற்ற இராம தேவன் அரசனது வினவிற்கேற்ற விடையினை ஒலை பொன்றில் எழுதி அரசன் பார்வைக்கு அனுப்பினர். சேக்கிழார் அமைச்சராதல் - இராமதேவனகிய சேக்கிழார் எழுதியனுப்பிய விடையினே வேந்தன் அநபாயன் கண்டு வியந்தான். அவ் விடை, உலகப் பொதுமறையாகிய திருக்குறளி லிருந்து எடுத்து எழுதப்பெற்றிருந்தது. - காலத்தி னுற்செய்த நன்றி சிறிதேனினும் ஒாலத்தின் மாணப் பெரிது, பயன்துக்கார் செய்த உதவி நயன்துக்கின் நன்மை கடலிற் பெரிது, . நிலையில் திரியா தடங்கியான் தோற்றம் மலையினும் மானப் பெரிது.” - சிறந்த அறநூலாகிய திருக்குறளில் கானும் இம் மூன்று பாக்களும், தான் கேட்ட விவிைற்கு ஏற்ற விடையாக விளங்குவதைச் சோழன் கண்டான். இவற்றைக் கண்டெழுதிய தண்டமிழ்ப் புலவரைப்பற்றிப் பல துறை அறிஞர்களிடமும் உசாவி அறிந்தான். இராம தேவன் சோழப் பேரரசின் அமைச்சுரிமை பெறு தற்குப் பெரிதும் தகுதியுடையவர் என்பதைப் பல வகையாலும் அபாயன் ஆராய்ந்து அறிந்தான். அவரை வரவழைத்துத் தனது பேரரசுக்கு முத லமைச்சராக்கினன். அவர்வழி நின்முெழுகினன்.