உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பட்டம் பெறுதல் சோழ நாட்டு முதலமைச்சராகப் பதவியேற்ற சேக்கிழான் இராமதேவன் தமது அமைச்சுத் தொழிலைத் திறம்பட நடத்தினர். அரசியல் பொறுப்பு முழுவதையும் அமைச்சரே ஏற்று ஆற்றலுடன் நடத்துவது கண்ட அநபாயன் அவருக்கு உத்தம சோழப் பல்லவன் என்னும் உயரிய பட்டத்தை வழங்கிப் பாராட் டினன். இவ் அநபாயன் சிறந்த சிவபக்தன். தில்லைக் கூத்தப்பெருமானிடத்து எல்லேயற்ற பத்தி பூண்ட வன். இவன் புவனமுழுதுடையாள் என்ற இராசமா தேவியுடன் தில்லைக்குச் சென்று கூத்தப்பெருமானே வழிபட்டான். ஆங்குத் தேரோடும் திருவீதிகள் நான்கையும் பொன்னகரப் பெருவீதிகளும் பின் னடையுமாறு பேரழகு செய்தான். கூத்தப்பெருமான் குடிகொண்ட பேரம்பலத்திற்குப் பொன்வேய்ந்தான். இவ் அரசர்பெருமான், கூத்தப்பெருமான் பாத தாமரையில் உள்ள தேனைப்பருகும் ஈப்போன்றவன்,' என்று திருவாரூர்க் கல்வெட்டுக் குறிக்கின்றது. அநபாயன் சிந்தாமணி ஆர்வம் - இவ் அநபாயன் காலத்தில் சோழநாட்டின் தலைநகரமாக விளங்கியது கங்கைகொண்ட சோழபுரம். எனினும் அவன் தில்லைப் பெருமானிடத்துக் கொண்ட காதலால் அத் தில்லையில் இருந்த அரண்மனையில் தங்கித் தமிழ்நூல்களிலும் சமயநூல்களிலும் சிந்ை தி யைச் செலுத்தினன். ஒருகால் தனது அவைப் புலவர்கள் சிந்தாமணிக் காவியத்தைப்பற்றிச் சொல்லக் கேட்டான். அதனைப் புலவர்கள் பலகால் வாசிக்கக் கேட்டு மகிழ்ந்தான். -