98 மறுமைக்கோ எந்த கலனும் விளேயாது. நம் சைவு சமயத்தில் கைம்மாறு கருதாது கடவுள் தொண்டாற் றித் திருவடிப்பேறு எய்திய சிவனடியார்கள் பலர் உளர். அவர்களுடைய வரலாற்றைக் கற்ருல் இருமைக் கும் பெரும்பயன் விளையும் பேரின்ப வீட்டையும் பெற லாம்,' என்று பணிந்து மொழிந்தார். அடியவர் வரலாறு அறிதல் அமைச்சராகிய சேக்கிழார் கூறிய அன்புமொழி களைப் பண்புடன் கேட்ட அபாயன், சிவனடியார் வரலாறுகள் விரிவாகவும் தெளிவாகவும் நமக்குக் கிடைக்கவில்லையே. சுந்தரரின் திருத்தொண்டத் தொகையும், கம்பியாண்டார் நம்பி பாடிய திருத் தொண்டர் திருவந்தாதியும் தகுந்த விளக்கத்தைத் தரவில்லேயே. அவற்றை விளக்கும் வேறு சான்றுகள் உண்டோ ?” என்று கேட்டான். சேக்கிழார், மன்னனைப் பணிந்து, தாங்கள் குறித்த இரு நூல்களும் சிவனடியார் வரலாறுகளைத் தெளிவாக அறிதற்குப் போதா. கம்பியாண்டார் நம்பி சம்பந்தரைப் பற்றி ஆறு சிறு நூல்கள் பாடியுள்ளார். அப்பரைப் பற்றி ஒரு நூல் பாடியுள்ளார். சம்பந்தரும் அப்பரும் சுந்தரரும் தக்தருளிய தேவாரத் திருமுறை கள் உள்ளன. சேரமான் பெருமாள் பாடிய அந்தாதி யும் உலாவும் உள்ளன. காரைக்காலம்மையார் பாடிய சிறு நூல்கள் இருக்கின்றன. திருமூலர் அருளிய திருமந்திரம் என்னும் நூல் உள்ளது. அடியார்கள் பிறந்தருளிய தலங்களில் மக்களிடையே வழங்கும் பல வரலாறுகள் உண்டு. பல திருக்கோவில்களில் காணப் படும் கல்வெட்டுக்கள் இவ் வரலாறுகட்கு உதவி செய் கின்றன. ஆங்காங்குக் காணப்படும் சிற்பங்கள்
பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/106
Appearance