பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 வாயிலாகப் பல செய்திகள் புலனுகின்றன. இராசராசப் பெருவேந்தரால் நிறுவப் பெற்ற தஞ்சைப் பெரிய கோவில் ஒவியங்கள் சுந்தரர் வரலாற்றின் பெரும் பகுதியை விளக்குகின்றன. இவற்றை எல்லாம் அடியேன் ஒருங்கு தொகுத்து வைத்துள்ளேன்,' என்று அவன் உள்ளம்கொள்ளுமாறு சொல்லி சின்ருர், காவியம் இயற்ற வேண்டுதல் சேக்கிழாரது வாக்கு வன்மையையும் சிறந்த கோக் கையும் கண்ட பேரரசனகிய அருபாயன் பெருவியப்பும் பேருவகையும் கொண்டான். அவரது பெருமுயற்சி யைப் பாராட்டின்ை. அவரது மதிநுட்பத்தையும் அடியார்மீதுகொண்ட அளவற்ற பற்றையும் எண்ணி யெண்ணி இன்புற்ருன். சேக்கிழாரைக் கொண்டே சிவனடியார் வரலாற்றைச் சிறந்த காவியமாக அமைக்கத் துணிந்தான். அவரை அழைத்து, "அமைச் சரே விேர் இன்றே நம் காட்டு அமைச்சர் வேலையி விருந்து ஓய்வு பெற்றுத் தில்லைக்குச் செல்ல வேண்டும். ஆங்கு அமர்ந்து, சிவனடியார் வரலாற்றைச் செக் தமிழ்க் காவியமாகப் பாடியருளவேண்டும். நீரே அவ் அருஞ்செயலே முடிக்க முற்றிலும் தகுதி பெற்றவர். நுமக்குத் தில்லையில் வேண்டும் வசதிகள் எல்லாம் செய்து தரப்படும், என்று அன்புடன் கூறினன். தில்லேயில் சேக்கிழார் - அரசனது அன்பு நிறைந்த சிங்தையையும் சிவபத்தி யையும் கண்ட சேக்கிழார், இஃது இறைவன் திருவருள் போலும்' என்று எண்ணி, அரசன் வேண்டுகோளே ஏற்றனர். அன்றே தில்லைத் திருருகருக்குப் புறப்பட லாயினர். அரசியல் அலுவலாளர் பலர் அவருக்கு