பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 பணியைப் பற்றி ஒற்றர், தூதர் வாயிலாக உணர்ந்த வண்ணமாக இருந்தான். காவியம் நிறைவுற்ற செய்தி காதுக்கு எட்டியவுடன் அகபாயன் அளப்பரிய களிப் புற்ருன். அக் காவியத்தை அரங்கேற்ற கன்னுள் ஒன் றைக் குறிப்பிடுமாறு சேக்கிழாருக்கு ஒலே போக்கினன். சேக்கிழார், சித்திரைத் திருவாதிரையில் காவியத்தை அரங்கேற்றலாமென அரசனுக்குச் செய்தியனுப்பினர். அம் மங்கலச் செய்தியைப் பலநாட்டு மன்னர்க்கும் அறிவித்து அநபாயன் ஒலே போக்கினன். திருத்தொண்டர்புராண அரங்கேற்றம் அபாய சோழ மன்னன் தொண்டர்புராண அரங் கேற்ற விழாவைக் கண்டு மகிழப்புறப்பட்டான். அவன் படைகள் புடைசூழப் பேராரவாரத்துடன் தில்லேத் திருநகரைச் சேர்ந்தான். சிவவேடப் பொலிவுடன் விளங்கிய சேக்கிழார் பெருமானைக் கண்டு வணங்கினன். தன்னை எதிர்கொண்ட தில்லைவாழந்தணர்கள், மட பதிகள் முதலியோருடன் திருக்கோவிலே அடைந்து அம்பலக் கூத்தன் அடிகளைப் பணிந்தான். அப்போது எல்லோரும் கேட்குமாறு, அரசனே 'உலகெலாம்' என்று காம் அடியெடுத்துக் கொடுக்கச் சேக்கிழான் திருத்தொண்டர் புராணத்தைச் செய்து முடித்துள் ளான். நீ அதனைக்கேட்டு அகமகிழ்வாயாக!' என்று இறைவன் அருள்வாக்கு வானில் எழுந்தது. அவ் வொலியுடன் இறைவன் திருவடிச் சிலம்பொலியும் அடியவர் செவிகுளிரக் கேட்டது. இவ் வொலிகளைக் கேட்ட அரசன் அபாயனும் தில்லைவாழந்தணர்களும் சித்திரைத் திருவாதிரைத்திரு நாளில் புராண அரங்கேற்றத்தைத் தொடங்குமாறு