103 பிடரியில் ஏற்றின்ை. அரசன் தானும் ஏறிச்சேக்கிழா பின்னே அமர்ந்துகொண்டு, தன் இரு கைகளாலும் அவருக்குச் சாமரை வீசினன். எண்ணற்ற இன்னியங் கள் முழங்கத் தில்லை நகரத்தை வலம் செய்வித்தான். 'யான்செய்த தவப்பயன் இதுவன்ருே' என்று மகிழ்க் தான். இறைவன் அருண்மொழியை முதலாகக் கொண்டு புராணம் பாடிய அமைச்சராகிய சேக் கிழாரை அருண்மொழித்தேவர் நீடு வாழ்க!' என்று வாயார வாழ்த்தின்ை. நகர்வலம் முடிந்து, எல்லோரும் தில்லைக்கூத்தன் சந்நிதியை அடைந்தனர். திருமுறை கண்டசோழனுகிய இராசராசன் காலத்தில் நம்பியாண்டார் நம்பிகளால் வகுக்கப் பெற்றிருந்த பதினெரு திருமுறைகளுடன் திருத்தொண்டர் புராணத்தைப் பன்னிரண்டாம் திரு முறையாகச் சேர்த்துச் செப்பேடு செய்யுமாறு அகடா யன் ஆணையிட்டான். 'இன்று முதல் சைவத் திரு முறைகள் பன்னிரண்டாகும்” என்று நாடெங்கும் பறையறையப் பணித்தான். சேக்கிழார் பெருமானுக் குத் தொண்டர் சீர் பரவுவார் என்ற பட்டத்தை அன்றே வழங்கினன். அவருக்கு ஞானமுடி சூட்டி அடி பணிந்து வணங்கினன். சேக்கிழார் ஓய்வுநாட் பணி அதன்பின் சேக்கிழார் தமது அமைச்சுப் பதவியி னின்று விலகி ஓய்வு பெற்ருர். தமது பிறப்பகமாகிய குன்றத்தூரை அடைந்தார். தாம் தேடியபெருநிதியத் தைக் கொண்டு சிவபிரானுக்குத் திருக்கோயில் ஒன்று அமைக்க விழைந்தார். அவர் அமைச்சராக விளங்கிய நாளில் காட்டிலுள்ள பல்வேறு நகரங்களையும் சிறந்த சிவ த்தலங்களையும் பார்வையிடச் செல்வார். அங்கனம்
பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/111
Appearance