பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 சென்ற காலத்தில் அவரது சிங்தையைக் கவர்ந்த தலம் திருநாகேசுரம் என்பதாகும். அத் தலத்தையே சேக் கிழார் தமது ஆன்மார்த்த தலமாக நேசித்துப் பூசித் தார். அதனால் அவர் தம் ஒய்வுக் காலத்தில் தமது ஊராகிய குன்றத்துாரில் திருநாகேசுரம் திருக்கோவிலைப் போன்றதொரு கோவிலே எடுத்தார். அதற்கும் திரு காகேசுரம் என்றே திருப்பெயர் அமைத்தார். சேக்கிழார் சோழநாட்டுச் சிவத்தலமாகிய திருகாகே சுரத்தைப் பெரிதும் விரும்பினர் என்பதற்கு இன்றும் அத் தலத்தில் தக்க சான்றுகள் உண்டு. சேக்கிழார், அவர் தம்பியாராகிய பாலருவாயர், அவர் தாயாராகிய அம்மையார் ஆகிய மூவருடைய திருவுருவங்களும் அத் திருக்கோவிலில் அமைக்கப்பெற்றுள்ளன. சேக்கிழார் அமைச்சராக விளங்கிய காலத்தில் பெரும்பாலும் இத் தலத்திலேயே தங்கித் தம் அரசியல் அலுவல்களைக் கவனித்து வந்தார் என்பர். பாலருவாயர் பதவி பெறுதல் சேக்கிழார் ஓய்வுபெற்ற பின்னர் அவர் குடியினை ஆதரிக்கவேண்டும் என்று கருதிய அகபாய சோழன் அவர் தம்பியாராகிய பாலருவாயரை அழைப்பித்தான். அவருக்கே அமைச்சர் பதவியை வழங்கிப் போற்றி ன்ை. அமைச்சர் டாலருவாயரும் அண்ணலாரைப் போன்றே அருந்திறலுடன் அரசியற் காரியங்களைக் கவனித்துவந்தார். ஆதலின் அநபாயன் அவருக்குத் ‘தொண்டைமான்’ என்ற பட்டத்தை வழங்கிப் பாராட் டினன். அவர் தமது ஊரில் தங்கியிருந்தே அமைச்சுப் பணியை ஆற்றிவந்தார். ஆதலின் அவர் தொண்டை மண்டலம் கின்றுகாத்த பெருமாள்' என்று பெயர் வழங்கப்பெற்ருர்.