பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 06 திருத்தொண்டர்புராணம் பாடுவதற்குத் திருத் தொண்டத் தொகையாகிய முதல்நூலேத் தந்த சுந்தரரே பெரியபுராணப் பெருங்காவியத்தின் தலைவர். அவர் கயிலாயத்தில் சிவபிரானுக்கு அணுக்கத் தொண் டராய் விளங்கிய ஆலாலசுந்தரர் என்னும் அடியவர் பெருமான். அவர் மாதவம் செய்த தென்றிசை வாழ வும், தீதிலாத் திருத்தொண்டத் தொகை தரவும் கம லினி, அகிந்திதை என்னும் இரு தோழியருடன் நிலவுல கில் அவதரித்தார். அவரே கம்பியாரூரர், வன்ருெண் டர், தம்பிரான் தோழர் என்ற பெயர்களுடன் விளங் கித் திருவாரூரில் பரவையாரையும் திருவொற்றியூரில் சங்கிலியாரையும் திருமணம் புரிந்தார். கயிலாயத்தில் இறைவியின் தோழியராக விளங்கிய கமலினியும் அங்க் இதையுமே முறையே பரவையார், சங்கிவியாராகப் பாருலகில் தோன்றினர். ‘மணக்கோலம் தாங்கி வரும் சுந்தரரைக் காணக் கண்கள் எண்ணில்லாதனவேண்டும்' என்று கண்டவர் எல்லோரும் கொண்டாடும் கட்டழகு வாய்ந்த சுந்தரர் காவியத் தலைவராக விளங்குதற்குப் பெரிதும் தகுதி யுடையவரன்ருே கண்கொள்ளாக் கவின்பொழியும். திருமேனியுடைய சுந்தரரது வரலாற்றைச் சந்தமுறச் சொல்லும் செந்தமிழ்க் காவியமன்ருே பெரியபுராணம். பரவையாரும் சங்கிலியாரும் இக் காவியத்தின் தலைவிய ராவர். திருத்தொண்டத் தொகை பிறந்ததும் பரவை பார் காதல்மணம் நிகழ்ந்ததும் ஆகிய சோழநாடும் திருவாரூருமே இப் பெருங் காவியத்திற் பேசப்பெறும் நாடும் நகருமாகும். சிவபத்தி, அடியார் பத்தி என்ற இருவகைப்பட்ட பத்திநெறியே இக் காவியத்தின் உள்ளுறை பொருளாகும். -