107 காவியத் தலைவராகிய சுந்தரர் கயிலையின் நீங்கி நில வுலகில் தோன்றிய செய்தி, நூலின் தொடக்கத்தில் திருமலைச் சருக்கத்தில் சொல்லப்படுகிறது. நூலின் இறுதியில் உள்ள வெள்ளே யானைச் சருக்கத்தில் மீண்டும் அவர் வெள்ளே யானேயின் மீது ஏறிக் கயிலா யம் சென்று சேர்ந்த செய்தி கூறப்படுகிறது. சேக்கிழார், சுந்தரரது வரலாற்றை நான்கு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டார். முதற் பகுதியைத் தடுத்தாட் கொண்ட புராணம் என்று அமைத்தார். இரண்டாம் பகுதியை ஏயர்கோன் கலிக்காமர் வரலாற்றுடன் இணைத்தார். மூன்ரும் பகுதியைக் கழறிற்றறிவார் புராணத்துடன் கலந்தார். நான்காம் பகுதியை நூலிறுதியில் வெள்ளே யானைச் சருக்கத்தில் விளம்பினர். தடுத்தாட்கொண்ட புராணத்தில் சுந்தரர் திருவா ரூரில் பரவையாரை மணம் புரிந்து, திருத்தொண்டத் தொகை பாடியது முடியவுள்ள வரலாறு பேசப்படு கிறது. ஏயர்கோன் கலிக்காமர் புராணத்தில் அவர் தலபாத்திரை செய்து, சங்கிலியாரை மணம் புரிந்து, திருவாரூர்க்குத் திரும்பியது வரையுள்ள வரலாறு பேசப்படுகிறது. கழறிற்றறிவார் புராணத்தில் சுந்தரர் சேரமான் பெருமாளுடன் நட்புக்கொண்டு கொங்கு நாட்டிலும் சேர காட்டிலும் தல யாத்திரை செய்தது பற்றிய வரலாறு கூறப்படுகிறது. வெள்ளையானேச் சருக்கத்தில் சுந்தரர், சேரமான் பெருமாளுடன் கயி லேக்குச் சென்ற வரலாறு கட்டுரைக்கப்படுகிறது. அத் துடன் பெரியபுராணம் முற்றுப்பெறுகிறது. இங்ங்னம் பெரியபுராணத்தில் நான்கு பகுதி களாகப் பிரித்துப் பேசப்படும் சுந்தரர் வரலாற்றுக்கு
பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/115
Appearance