பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 இடையே பல அடியார்களின் வரலாறுகள் சொல்லப் படுகின்றன. அவையெல்லாம் நூலின் துணைக்கதை களாகவே விளங்குவனவாகும். அவ் வரலாறுகள் அனைத்தும் சுந்தரரால் திருத்தொண்டத் தொகையில் குறிக்கப் பெற்றவை. ஆதலின் அவரது வரலாற் றுடன் இணைந்த அங்கங்கள் என்றே அவை சொல்லத் தக்கன. அக் கருத்தை வலியுறுத்தும் நோக்கத்துட னேயே சேக்கிழார், நூலிலுள்ள பதின்மூன்று சருக்கங் களின் இறுதியிலும் சுந்தரரது வரலாற்று நிகழ்ச்சி யொன்றைச் சுட்டிக்கொண்டே செல்கின்ருர். மேலும், இந் நூலைச் சேக்கிழார் இரு காண்டங் களாகப் பிரித்து, ஒவ்வொரு காண்டத்தையும் பல சருக்கங்களாகவும் வகுத்துள்ளார். சருக்கங்களின் உட் பிரிவுகளாக அடியார்களின் புராணத்தைத் தனித் தனியே அமைத்துள்ளார். நூலுள்ளே தக்க இடங் களில் மலே, ஆறு, கடல், கதிரவன் உதயம், திங்களின் தோற்றம் முதலியன ஆசிரியரால் அழகுற வருணிக்கப் படுகின்றன. பெருங்காவியம் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப்பொருள் கான்கையும் உணர்த்த வேண்டும். பெரும்பாலான காவியங்கள் முதல்மூன்றை மட்டுமே அறிவுறுத்தும் மொய்ம்புடையனவாகும். இறுதியிலுள்ள வீட்டைப் பற்றியும் உறுதி தோன்ற விளக்கும் உயர்வு, பெரியபுராணத்திற்கு உண்டு. இங்ங்னம் பெருங்காவியத்திற்கு அமைய வேண்டிய இலக்கணங்கள் எல்லாம் ஒருங்கு இயைந்து விளங்கும் பெரியபுராணம் ஒரு பெருங்காவியமே என்பதில் சிறிதும் ஐயமில்லை.