பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ங். பெரியபுராணத்தின் பெருமை பன்னிரண்டாம் நூற்ருண்டில் தோன்றிய பைங் தமிழ்ப் பெருங்காவியமாகிய பெரியபுராணம், இறைவன் 'உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்கப் பாடப் பெற்ற பெருமையுடையதாகும். இறைவன் திருவரு ளைப்பெற்று வீடுபேறுற்ற சிவனடியார்களின் சிறந்த வரலாறுகளைத் தெய்வ மணக்கும் செய்யுளால் விளக் கும் சிறப்புடையதாகும். சிவபெருமானத் தோழராகப் பெறும் தவப்பேறு எய்திய சுந்தரரைக் காவியத் தலைவ ராகக்கொண்டு பாடப்பெற்ற தனிப்பெருமை உடைய தாகும். செயற்கரிய செய்வார் பெரியர் ' என்று பெரி யார்க்கு இலக்கணம் வகுப்பார் திருவள்ளுவர். பெரிய புராணத்தில் பேசப்படும் அடியார்கள் அனைவரும் செயற்கரிய செயல்களைப் புரிந்தருளிய பெருமக்கள். அவர்களுடைய உண்மையான வரலாறுகள் பத்திச் சுவை சொட்டச்சொட்டப் பசுந்தமிழால் பாடப்படு கின்றன. சொல்நயம், பொருள்கயம் பொருந்திய சிறந்த பாக்களால் அமைக்கப்பட்டுள்ளன. மங்கல மல்லாத சொற்களே மருவாதவண்ணம் அருள்மணம் கமழ ஆக்கப்பெற்ற அரிய காவியம் பெரியபுராணம். இந் நூல் முதன்முதல் தமிழிலேயே இயற்றப் பெற்றது. காவியத் தலைவராகிய சுந்தரர்க்குத் திருவா ரூர்ப் பெருமான் அடியெடுத்துக் கொடுக்கப் பாடிய திருத்தொண்டத்தொகைப் பதிகத்தையே முதல் நூலா கக் கொண்டு மொழியப்பெற்றது. திருகாரையூர்ப் பொல்லாப் பிள்ளையாரின் நல்லருள் பெற்ற நம்பியாண் டார் நம்பி பாடியருளிய திருத்தொண்டர் திருவந்தாதி, திருத்தொண்டத்தொகையின் வழிநூலாக அமைந்தது.