உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 10 இவ் விரண்டையும் ஆதாரமாக வைத்துக் கொண்டே சேக்கிழார் பெரியபுராணமாகிய சார்புநூலேப் பாடி யருளினர். இவற்றை முறையே தொகைநூல், வகை நூல், விரிநூல் என்று குறிக்கலாம். இக் கருத்தைச் சிவஞானமுனிவர், 'துக்கு சாத்திருக் தொண்டத் தொகைவிரி வாக்கி னுற்சோல்ல வல்ல பிரான்.” என்று குறித்தருளுவார். கி. பி. நான்காம் நூற்ருண்டு முதல் ஏழாம் நூற் முண்டின் தொடக்கம் வரை தமிழகத்தின் இருண்ட காலம்' என்று வரலாற்று ஆசிரியர்கள் பேசுவர். அக் காலத்தில் தமிழகம் இருந்த கிலேயைத் தெரிந்து கொள்ளத்தக்க சான்றுகள் இல்லே. அதற்குப் பிற்காலத் தில் தமிழகத்தை ஆண்ட பல்லவ மன்னர்களின் கால கிலேயைக் காணுதற்கும் போதிய ஆதாரங்கள் இல்லை. இக் குறைகளே ஒரளவு நீக்க வல்லதாகப் பெரிய புராணம் உள்ளது. வரலாற்றில் இருண்ட பகுதியை விளக்கும் மணிவிளக்காகப் பெரியபுராணம் விளங்கு கிறது என்று சொல்லலாம். சோழன் கோச்செங்களுன் சிறந்த சிவத் தொண்டன். அவன் பெரியபுராணத்தில் பேசப்படும் அடியார்களுள் ஒருவன். அவனது வரலாற்ருல் தமிழக வரலாற்றின் இருண்டகாலம் ஓரளவு ஒளி பெறு கின்றது. திருநாவுக்கரசர் வரலாற்ருல் மகேந்திர வர்மனது வரலாறு தெளிவடைகின்றது. சிறுத் தொண்டர் வரலாற்ருல் நரசிம்மவர்மன் வரலாறு கன்கு புலனுகின்றது. பூசலார் வரலாற்ருல் காடவர்கோன் கழற்சிங்கன் வரலாறு காணக்கிடைக்கிறது. கழற்சிங்கர் வரலாற்ருல் மூன்ரும் கந்திவர்மன் வரலாறு விளக்கம்