பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலச் செய்யுட்களால் ஆகிய நூல்கள் தமிழில் தோன்றவில்லை. குலத்தாலும் பிற கலத்தாலும் தன்னேரில்லாத தகைமை எய்திய தலைவன் ஒருவனது அரிய வரலாற்றை அழகுற விளக்கும் நூலே காப்பியம் எனப் படும். இதனைப் பெருங்காப்பியம் என்றும் சிறு காப்பியம் என்றும் இருவகையாகப் பிரிப்பர். அணி யிலக்கணம் வகுத்த தண்டியாசிரியர் இருவகைக் காப்பியத்திற்கும் இலக்கணம் வகுத்துள்ளார். பெருங்காப்பியத்தில் வாழ்த்து, வணக்கம், உரைக் கும் பொருளுணர்த்தல் என்ற மூன்றனுள் ஒன்று, முதற்கண் அமையவேண்டும். இவற்றுள் இரண்டு வரினும் இழுக்கன்று. மூன்றும் ஒருங்கு வரினும் உயர்வே என்பர் ஆன்ருேர், கற்பார்க்கு அறம், பொருள், இன்பம், வீடென்னும் நான்கனேயும் பயக் கும் கல்லியல்புடையதாய் நூல் இருக்கவேண்டும். தன்னோடு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதானத் தலைவ கைக்கொண்டு நடக்கவேண்டும். மலே, ஆறு, கடல், நாடு, நகரம், பருவம், கதிரவன் தோற்றம்- மறைவு, திங்கள் தோற்றம் இவை போன்றவற்றின் இனிய வருணனைகள் அமையவேண்டும். திருமணம், முடி சூட்டல், பொழில்விளையாட்டு, புனல்விளையாட்டு, மக்கட்பேறு, ஊடல்வாட்டம், கூடல்இன்பம் இவை போன்ற சிறப்புக்களைச் சித்திரிக்க வேண்டும். மந்தி ரம் இருத்தல், தூதுவிடுத்தல், பகைமேற் செல்லல், போர்புரிதல், வெற்றியுறுதல் முதலாய நிகழ்ச்சிகளைத் தொடர்பாக மொழிதல் வேண்டும். காதை, சருக்கம், இலம்பகம், படலம் முதலிய பாகுபாடுகளைப் பெற்று வரல் வேண்டும். கற்பார்க்கும் கேட்பார்க்கும் ஒன்