112 தவிரச் சேக்கிழார் ஒரு வரிகூடப் பாடியவரல்லர். அவர் தம்முடைய முழுப்புலமையையும் பெரியபுராணம் ஒன்றற்கே செலவிட்டார். அதனால் இந் நூல் இணை யற்ற சைவக் காவியமாக எழிலுருப் பெற்றது. சைவசமயத்தைச் சார்ந்த மூன்று புராணங்களைச் சைவ நன்மக்கள் தெய்வக் காப்பியங்களாகச் சிரமேல் கொண்டு போற்றுவர். அவை பெரியபுராணம், திரு விளையாடற்புராணம், கந்தபுராணம் என்ற மூன்று மாகும். கந்தபுராணம் சிவபெருமானது செந்தழற் கண் ணுகச் சிறப்பிக்கப்படும். திருவிளையாடற் புராணம் அப்பெருமானது இடக்கண்ணுகக் குறிக்கப்படும். பெரியபுராணமோ அப் பெருமானின் வலக்கண்ணுக மதிக்கப்படும். உமாபதிசிவனுர் தமிழில் உயர்ந்த நூல்களென ஆறு நூல்களேத் தேர்ந்து உரைக்கின்ருர். அவற்றைத் 'தண்டமிழின் மேலாம் தரம் என்று கொண்டாடு கின்ருர், திருக்குறள், திருவாசகம், தொல்காப்பியம், பரிமேலழகர் உரை, திருத்தொண்டர்புராணம் ஆகிய பெரியபுராணம், சிவஞானசித்தியார் என்னும் ஆறு நூல்களும் தமிழில் முதல்தரமான நூல்கள் என்று மொழிந்தருளினர். அவர் பெரியபுராணத்தை ஒள்ளிய சீர்த் தொண்டர் புராணம்' என்று அதன் உயர்வு தோன்ற அடைமொழிகள் கொடுத்துக் குறித்தார். மெய்ஞ்ஞானமும் மேதினிஞானமும் ஒருங்கு பயக்கும் உயர்வுடையது பெரியபுராணம் என்பதை வலியுறுத் தவே அவர் ஒண்மை, சீர்மை என்ற இரண்டு அடை மொழிகளால் பாராட்டினர். இங்ங்ணம் பல்வகை யாலும் சிறப்புற்று விளங்கும் பெரியபுராணம் அரிய சைவத் தமிழ்க் கருவூலமாகும். - -
பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/120
Appearance