பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 நிகழ்ச்சியொன்றைக் குறிப்பிட்டு, அவரது புலமையைப் பாராட்டுகின்ருர், - 'காவலவன் மண்ணிற் கடலின் மலையிற் பெரிதெனென எண்ணியெழ திக்கொடுத்த ஏற்றக்கை? என்று சேக்கிழார் திருக்கரத்தைக் கம்பர் சிறப்பித் துள்ளார். ஏறத்தாழ நூற்றெண்பது ஆண்டுகட்கு முன்னர் விளங்கிய மாதவச் சிவஞான சுவாமிகள் தாம் பாடிய காஞ்சிப்புராணம் கடவுள்வாழ்த்துப் பகுதியில் சேக் கிழார் பெருமானுக்கும் வணக்கம் செலுத்துகின்ருர், ‘தூக்கு சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி வாக்கி னுற்சொல்ல வல்ல பிரான்னங்கள் பாக்கி யப்பய னுப்பதி குன்றைவாழ் சேக்கி ழானடி சென்னி இருத்துவாம்.? என்பது அவரது துதிப்பாடலாகும். இப் பாட்டுள் "எங்கள் பாக்கியப் பயன் சேக்கிழார் என்று சிறப்பித் தருளினர் சிவஞானமுனிவர். சென்ற நூற்ருண்டில் வாழ்ந்த பெருந்தமிழ்ப் புலவ ராகிய மகாவித்துவான் மீனுட்சிசுந்தரம் பிள்ளே, சேக் கிழார்மீது பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தம் பாடியுள்ளார். அது பிற்காலத்தில் எழுந்த மிக உயர்ந்த பிரபந்தமாகும். அதிலே அவர் சேக்கிழாரைப் பத்திச் சுவை தனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ! என்று வாயார வாழ்த்துகின்ருர். அவருடைய பாடற் சிறப்பைக் குறிப் பிட வந்த மகாவித்துவான், தெய்வ மணக்கும் செய்யு ளெல்லாம் என்று சிந்தை குளிரப் பாராட்டுகின்ருர். அவர் சேக்கிழாரது புலமைச் சிறப்பை விளக்கும் வகை