பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 iË யில் அழகிய பாடலொன்றைச் சப்பாணிப் பருவத்தில் அமைத்துள்ளார். - ஆசிரியர்கள் தம் அறிவாலும் திறனுலும் தகுதி வேறுபாடு உடையவராக விளங்குவர். ஒரு சிலர் நூல் இயற்றும் ஆற்றலே பெற்றிருப்பர் : அன்னர் நூலாசிரி யர் ஆவர். வேறு சிலர் உரை எழுதுவதில் திறமை உடையவராய்த் திகழ்வர்; அவர்கள் உரையாசிரியர் எனப்படுவர். மற்றும் சிலர் சமய உண்மைகளைப் போதிப்பதில் புலமை சான்றவராக விளங்குவர்; அவர் கள் போதகாசிரியர் என்று போற்றப்பெறுவர். இன் னும் சிலர் இறைவன் இன்னருளேப் பெறுதற்கு நன் னெறி காட்டுவர். அவர்கள் ஞானசிரியர் என்று தலைக் கொண்டு போற்றும் தகுதியுடையர். பெரியபுராணப் பெருங்காவியத்தை அருளிய சேக்கிழார் பெருமானே நூலாசிரியராகவும் உரையாசிரியராகவும் போதகாசிரிய ராகவும் ஞானசிரியராகவும் சிறப்புற்று விளங்கும் திறப்பாட்டை அவரது அரிய நூலொன்ருலேயே அறிய ல்ாம் என்று மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளே மிகவும் அழகுறப் பாராட்டியுள்ளார். * இங்ங்னம் பல துறையிலும் பெரும்புலமை பெற்று விளங்கிய சேக்கிழார் பெருமானே முதலமைச்சராகப் பெறும் பேறு பெற்ற அபாய குலோத்துங்கன் பெருமைதான் என்னே! அவருடைய கலைகலத்தைக் கண்டு காவியம் செய்தருளுமாறு வேண்டிய அவனது சமயப் பற்றை என்னென்பது அரசும் அமைச்சும் கலந்து உருவாக்கிய திருத்தொண்டர் புராணத்தின் சிறப்பை அளவிடலாகுமோ سمهس