4. பான் சுவைகளும் மாறி மாறி ஊட்டுதல் வேண்டும். இத்தகைய பல்வேறு இயல்புகளும் அமையப் புலவரால் புனேயப்பெறும் இனிய கதைச் செய்யுட் கோவையே பெருங்காப்பியம் என்று குறிக்கப்படும். அறம், பொருள், இன்பம், வீடென்னும் நான்கு உறுதிப்பொருள்களேயும் நன்கு உணர்த்துவதே கன் லுரலின் இலக்கணம் என்பர் முன்னேர். பெருங்காப் பியம் அக் கான்கையும் விளக்கும் பெற்றியுடையதே. ஏதேனும் ஒன்று குறையினும் அது சிறு காப்பிய மெனச் செப்பலுறும். ஆனால், உறுதிப்பொருள் உணர்த்தும் திறத்தையன்றிப் பெருங்காப்பியத்திற் குரிய பிற உறுப்புக்களில் சில குறைந்துவரினும் அது வும் பெருங்காப்பியம் என்றே பேணத்தகும். இத் தகைய காப்பியம் ஒரேவகையான செய்யுளானும் பல வகைச் செய்யுளானும் உரை விரவியும் வரும். இதனைப் பொருட்டொடர்கிலேச் செய்யுள், கதைச் செய்யுள், அகலக்கவி, தொடர்டைச் செய்யுள், விருத்தச் செய்யுள் எனப் பல பெயரால் வழங்குவர். காப்பிய இலக்கணங்களில் குறைவுருது, கற்பவர் கேட்பவர் உள்ளங்களேக் கவரும் கதைச் செய்யுள் நூல்கள் தமிழில் பல உள்ளன. அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன ஐம்பெருங் காப்பியங்கள் ஆகும். சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஆகிய ஐந்தும் அப் பெருங்காப்பியங்கள் ஆகும். இவையன்றி ஐக் து சிறுகாப்பியங்களும் உள்ளன. யசோதர காவியம், சூளாமணி, உதயண குமார காவியம், காககுமார காவியம், லேகேசி ஆகிய ஐந்தும் அச் சிறுகாப்பியங்கள் ஆகும்.
பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/13
Appearance