5 ஐம்பெருங் காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணி மேகலை, சிந்தாமணி ஆகிய மூன்றுமே இற்றை நாளில் முழு வடிவுடன் நமக்குக் கிடைத்துள்ளன. ஏனைய இரு நூல்களும் அங்ங்னம் கிடைக்கவில்லை. அந் நூல் களின் ஒரு சில பாக்களே ஆங்காங்குக் காணப்படு கின்றன. உரையாசிரியர்கள் சிலர் அப் பாக்களைத் தம் உரையினுக்கு இடையே மேற்கோளாகக் காட்டுகின் றனர். ஐஞ்சிறுகாப்பியங்களுள்ளும் ககு மார காவியம் ஒழிய ஏனைய நான்குமே வெளியாகியுள்ளன. இவை யல்லாத வேறு சில பெருங்காப்பியங்களும் சிறு காப்பியங்களும் தமிழில் எழுந்துள்ளன. இராமா யணம், பாரதம், பெரியபுராணம், கந்த புராணம் முதலியனவும் பெருங்காப்பிய வரிசையில் எண்ணத் தக்க பெருமையுடையனவாகும் தமிழில் தொண்ணுாற்ருறு வகையான சின் னுரல்கள் உண்டு. அவைகளைப் பிரபந்தங்கள் என்பர். அப் பிரபந்தங்களில் சில சிறுகாப்பிய வரிசையில் சேர்க் கத் தக்க சிறப்புடையனவாகும். பரணி, உலா, மடல், பிள்ளைத்தமிழ், ஆற்றுப்படை போன்ற சிறு நூல்கள் ஒப்பிலாச் சிறப்புடைய ஒருவனைத் தலைவனுகக் கொண்டு பாடப்பெறும் பண்புடையன. ஒரு சில வருணனைகளையும் பெற்று நடக்கும் பெற்றியுடையன. ஆதலின் அவைகளைச் சிறுகாப்பியங்கள் என்று குறித் தல் பொருத்தமாகும். r உ. தமிழில் முதற் பெருங்காவியம் கன்னித் தமிழ்மொழியில் இந்நாள்வரை எண் ணற்ற காவியங்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் பெருங்காவியங்கள் சிலவே. சிறுகாவியங்கள் பலவாம்.
பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/14
Appearance