உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 தேனிலே ஊறிய செந்தமி ஜின்சுவை தேரும் சிலப்பதி காாமதை ஊனிலே எம்.ழயில் உள்ளள வும்நிதம் ஒதி உணர்ந்தின் புறுவோமே..? என்பது கவிமணியின் கவிதையாகும். தேனில் ஊறிய தீந்தமிழின் சுவையான பகுதிகளையெல்லாம் தேர்த் தெடுத்துத் தொகுத்த நூலே சிலப்பதிகாரம். அதனைத் தமிழர் வாழ்நாள் முழுதும் பலகால் ஓதி வளமான இன்பத்தைப் பெறுதல்வேண்டும் என்று அறிவுறுத் திர்ை. - ஒரு நூல் ஒப்புயர்வற்றதாக அமைதற்கு மற்றெரு காரணமும் கூறலாம். நூலைத் தரும் ஆசிரியன் மாசற்ற தூய வாழ்வுடையவனுகத் தேசுற்று விளங்கவேண்டும். அவன் தனது வாழ்வு முழுவதையும், தான் இயற்றும் ஒரே நூலுக்குத் தக்து உதவுதல் வேண்டும். அவனது சிக்தனையெல்லாம் எந்த நாளும் அந்த நூலைப் பற்றியன வாகவே இருந்து உருப்பெறுதல் வேண்டும். அந்நூலேத் தவிர ஒரு வரியேனும் உரைக்கவேண்டும் என்ற உள்ளம் அவனுக்கு உண்டாதல் கூடாது. அவனது வாழ்வில் வறுமையோ துயரமோ குறுக்கிடவும் கூடாது. இன்பம் நிறைந்த தூய வாழ்வுடைய இணே யற்ற பேரறிவாளகிைய ஓர் ஆசிரியனல் ஆக்கப் பெறும் நூல் ஐயமின்றி மெய்யாகவே தனிப்பெருஞ் சிறப்புடையதாகத் திகழும். இவ் வகையில் எழுந்த நூல்கள் தமிழில் மூன்றே உள்ளன. அவை திருக்குறள், சிலப்பதிகாரம், பெரிய புராணம் என்பன. இம் மூன்றுள் முதன்மை வாய்ந்த திருக்குறளே அருளிய திருவள்ளுவர் தெய்வப் புலவர் என்று போற்றும் சிறப்புற்றவர். சிலப்பதிகாரத்தைத்