பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தக்த செந்தமிழ் வல்லார் சேரநாட்டுப் பேரரசன் இமய வரம்பனது இளைய புதல்வராவர். இளங்கோவாகிய அவர் இளமையிலேயே துறவு பூண்டு, இளங்கோ வடிகளென விளங்கிய பெருங்கவிஞராவர். அவர் தூய்மையான துறவற நெறியில் கின்ற வாய்மையாளர். அறிவு நலங்கனிந்த அரசத் துறவியார். பெரியபுராணம் தந்தருளிய பேராசிரியர் சேக்கிழார் பெருமானே சோழப் பேரரசின் முதல் அமைச்சராகத் திகழ்ந்த மதிவல்லார். தெய்வப் புலமைச் சேக்கிழார் என்று சைவத் தமிழுலகம் போற்றும் சான்ருேராவர். ஒப்புயர்வற்ற செந்தமிழ் நூல்களைத் தந்தருளிய முப்பெருங் கவிஞருள் ஒருவராகிய இளங்கோ அறி விலும் திருவிலும் அரசராக விளங்கிய பெருமையர். ஆாய துறவுநெறியிலே நின்று செந்தமிழைச் சந்தமுற ஆயகதுணாகதவா. அவர் தமது புலமை 5லததை யெல்லாம் சிலப்பதிகாரக் காவியம் ஒன்றற்கே பயன் படுத்தினர். அந்தப் பெருநூாலேத் தவிர ஒரு வரி யேனும் அவர் உள்ளத்தில் கவிதையாக உருவெடுக்க வில்லே. ஆதலின் முதன்முதல் தமிழில் அவரால் உருவாக்கப்பெற்ற பெருங்காவியமாகிய சில ம்பு ச் செல்வம் பல்லாற்ருனும் முதன்மைபெறும் நல்லியல் புற்றது.